பெருந்தலைவர்


காமராஜர் அதிகாரிகளை அழைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களை தேர்வு செய்துவிட்டீர்களா என்று வினவ அவர்களோ தங்களால் தேர்வு செய்வதில் கடினமாக இருப்பதை தெரிவித்தனர். உடனே அய்யா சரி அந்த விண்ணப்பங்களை கொண்டு வாருங்கள் நான் தேர்வு செய்கிறேன் என்றார் ...அதிகாரிகளும் கொடுத்தனர்... கையில் வாங்கிய காமராஜர் இரண்டே நிமிடங்களில் தேர்வு செய்தார்.ஆச்சர்யமைடைந்த அதிகாரிகள் அய்யா நங்கள் இரண்டு நாட்களில் செய்ய முடியாத வேலையை நீங்கள் எப்படி இரண்டே நிமிடத்தில் முடித்தனர் என்று கேட்டனர் .


அதற்கு பெருந்தலைவர் ஒன்றும் இல்ல.... வந்திருந்த விண்ணப்பங்களில் பெற்றோர் கையெழுத்து இருந்த இடத்தில கைநாட்டு வைத்திருந்த விண்ணப்பங்களை தேர்வு செய்தேன் .படிக்காத பாமரர்களின் பிள்ளைகள் மருத்துவம் படிக்கட்டுமே .... அவர்களும் முன்னேறட்டும் ....படிக்காதவர்களின் பிள்ளைகள் படித்தால் எதிர்காலத்தில் அவர்கள் குடும்பம் , வாரிசுகள் என்று அனைவருமே படிப்பறிவு பெறுவார் ....இப்படி ஒவ்வொரு குடும்பமாக முன்னேறினால் நாடே முன்னேறும் என்றார். தன் ஒவ்வொரு செயலிலும் பாமர மக்களை முன்வைத்து எதிர்கால சிந்தனையுடனே செயல் பட்டார்.
Share on Google Plus

About Author

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment