முதல்வர் காரை நிறுத்திய போலீஸ்காரர்!

ஐயா! இது முதல்வர் செல்லும்போது, போக்குவரத்தை உஷார்படுத்த எழுப்பப்படும் ஒலி. முன்னாள் முதல்வர்கள் பிரகாசம் ஐயா, ராஜாஜி ஐயா எல்லாருடைய காலத்திலும் இருந்துவரும் சம்பிரதாயம்' என்றார் காவல்துறை அதிகாரி.


"இதுக்கு முன்னாலே இந்த சம்பிரதாயங்கள் எல்லாம் இருந்திருக்கலாம். எனக்கு இதெல்லாம் வேண்டாம்... சத்தம் போடாம, முன்னால போங்க' எனக் கூறிவிட்டு, அமைதியாய் தன் பயணத்தைத் துவக்கினார் காமராஜர். கார், கோடம்பாக்கம் - நுங்கம்பாக்கம் சாலை சந்திப்பை அடையும்போது, போக்குவரத்தை சரிசெய்துகொண்டிருந்த காவலர், காமராஜர் காரை நிறுத்தினார்.

காமராஜரின் காருக்கு முன்னால் நின்றிருந்த காவல் துறை அதிகாரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அதைப் பற்றி கவலைப்படாமல், போக்குவரத்து சீரானதும், காமராஜரின் காரை புறப்பட அனுமதித்தார் அந்த காவலர்.

தன்னைத் தாண்டி கார் செல்லும்போது தான், காரில் செல்பவர் காமராஜர் என்பது அந்த காவலருக்கு புரிந்தது. "முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமே. இனி என்னவாகுமோ' என நடுநடுங்கிப் போனார். அன்று மாலை காமராஜர் வீடு திரும்பும்போது, அவரது வீட்டின் முன், நடுங்கியபடியே காத்திருந்தார் அந்த காவலர்.

"முதல்வர் கார் என தெரியாமல் நிறுத்திவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்' என்று காவலர் கதற, "உங்க கடமையைத்தானே செய்தீங்க....' என்று அவரது தோளில் ஆதரவாய் தட்டி பாராட்டினார் காமராஜர். அதுமுதல், காமராஜரின் பயணத்தின்போது, பாதுகாப்புக்கு செல்லும் போலீஸ் வாகனங்கள், "சைரன்' ஒலி எழுப்பியதே இல்லை. தன்னை மக்களில் ஒருவராக கருதிய மாமனிதர்கள் வாழ்ந்த காலம்அது...
Share on Google Plus

About Author

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment