மக்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்திருக்கிறீர்கள்?


1967 தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவ, திமுக அறியணை ஏறியது.
அப்போது ஒரு காங்கிரஸ்காரர் காமராஜரிடம் சொன்னார்,
"மக்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். அப்படியும் நீங்கள் ஜெயிப்பதற்குத் தேவையான வாக்குகள் விழவில்லை. என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தீர்களா?
எதிர்க்கட்சிக்காரர்கள் ஓயாத பிரசாரத்தின் மூலம் நம்மை வீழ்த்திவிட்டார்கள். நீங்களோ நாம் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் செய்தோம் என்பதைக் கூடப் பிரசாரத்தில் விவரமாய்த் தெரிவிக்கவே இல்லை. நீங்கள் தோற்றதற்கு அதுதான் காரணம்!"
அதற்கு காமராஜர் சொன்ன பதில்,
"அட, போய்யா! பெத்த தாய்க்குச் சேலை வாங்கிக் குடுக்கிற மகன், ‘எங்கம்மாவுக்கு நான் சேலை வாங்கிக் குடுத்தேன், எங்கம்மாவுக்குச் சேலை வாங்கிக்க குடுத்தேன்னு தம்பட்டம் அடிக்கலாமான்னேன்!
நம்ம கடமையைத்தானேய்யா நாம செஞ்சோம்? அதில பீத்திக்கிறதுக்கு என்ன இருக்குன்னேன்?"
ஆனால் இன்றைய நிலையை சொல்லவும் வேண்டுமோ..?
கடமையை செய்தால் கூட தம்பட்டம் அடித்து கொண்டு இருக்கும் பொற்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்...
Share on Google Plus

About Author

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment